தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,திமுக பேனர்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா – சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். எனக்கு அதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதை அன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்தேன். ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது மூத்த பிள்ளையான “முரசொலி” ஏட்டின் முகப்பில் இப்போதும் அது மிளிர்கிறது; நமது இலட்சியத்தை நாட்டுக்குப் பறை சாற்றுகிறது. இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா – வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல. தமிழ்நாடு மீள வேண்டுமா – வாழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள்.
பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும். (பத்து நாட்களில் அனைத்து வார்டு, ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும்). குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும்.திமுக சார்பில் வழங்கப்படும் தொப்பிகள், ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…