நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.ஆனால் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டது.மேலும் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.திமுகவுடன் மக்களவையில் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிட்டது.காங்கிரஸ் போட்டியிட்ட 8 இடங்களில் தமிழகத்தில் வெற்றிபெற்றது.பின்னர் தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியிலும்,திமுக விக்கிரவாண்டியிலும் போட்டியிட்டது.ஆனால் இரண்டு கட்சிகளுமே தோல்வியை தழுவியது.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.இதற்கு மத்தியில் இரு கட்சியினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.இந்த சந்திப்பு கூட்டணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…