திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அவர்கள் அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். இவர் கட்சி சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்று வந்தாலும், உடல்நிலை பாதிப்புக்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மீண்டும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025