மக்களவையில் திமுக எம்.பி மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1 மசோதாவுக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் மசோதா, 7 பேர் விடுதலை, சித்த பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட ஏழு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளன. ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும்.
மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதா..? சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும். 7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசை எப்படி நடத்துவது..? ஆளுநர் ரவியின் செயல் வெட்கக்கேடானது என சரமாரி கேள்வி எழுப்பினார்.
ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவின் நிலை குறித்து ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தி வந்த நேரத்தில் மறுபுறம் மக்களவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக டி.ஆர்.பாலு முழக்கம் எழுப்பி வருகிறார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…