சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகின்ற 7-ஆம் தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், திமுக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும், காஞ்சிபுரத்தில் உள்ள 4 தொகுதியிலும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தலா இரண்டு தொகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று கைப்பற்றியது.
தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியைத் தவிர மற்ற 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…