திமுகவின் அரசியல் புரோக்கர் நாவடக்கத்தோடு பேச வேண்டும் – எல் முருகன்

Default Image

சமீபத்தில் நடந்த திமுக மேடையில் எஸ்.ரா சற்குணம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தேர்தல் சமயம் வந்தாலே, எதோ கிடைக்கும் காசுக்காக பல பேருக்கு காசு வாங்கி கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செய்லபடும் எஸ்ரா சற்குணம் அவர்கள் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது தமிழக மக்கள் அனைவரும் தெரியும். உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்களை, உங்களை போன்ற குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையான ஒன்று என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எஸ்.ரா.சற்குணம். நானும் ஒரு ஏழைதான். டீ வித்துக் கொண்டிருந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்தால், மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் அந்த ஆளு, கடவுள பத்திதான் பேசுறாரே தவிர, டவுள் பயமே இல்லை.

ஒரு மனுசன் கல்யாணம் பண்ணினா அஞ்சு நாளாவது பொண்டாட்டியோட வாழ்ந்தசி தானே கஷ்ட, நஷ்டம் தெரியும். கல்யாணம் கட்டி ஒரு வாரம் கூட பொண்டாட்டி கூட வாழக்கூடாதா? அப்படி உள்ள உனக்கு இந்த நாட்டை கட்டி ஆள என்ன தகுதி இருக்கிறது? புள்ளகுட்டிகளோட வாழ்ந்தாதானே கஷ்டம் நஷ்டம் தெரியும் என கடுமையாக விமர்ச்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்