[file image]
தமிழ்நாட்டில் வரவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறுவது. பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் உரிய ஆவணங்களுடன் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.!
தமிழகத்தில் 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவருமே வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னர் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 4, 5, 18, 19-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. அதாவது, ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 5-ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…