Annamalai [file image]
Annamalai : கோவையில் முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பின் ஈடுபட்ட போது பெற்றோர் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து பேசிய அண்ணாமலை கண்கலங்கினார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கோவையில் உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அந்த மேடையில் அவர் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஓராண்டு காலமாக இங்கு வந்து உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால், எனக்கு துளியும் நேரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய தினம் உறுதியாக நான் உங்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று இங்கு வந்து உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன். தற்போது உங்களை காண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்”, என்று உருக்கமாக பேசி கொண்டிருக்கும் போது அண்ணாமலை கண் கலங்கினார். அதன்பின் அங்கு இருந்த தொண்டர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோஷமிட்டு அவரை தேற்றினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…