பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு; மக்கள் பீதி – வட்டாட்சியர் விளக்கம்.!

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம் தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம்.
இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிம் ஆகிய பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் தெரிவித்திருந்தன. அதேபோல் காரைக்கால் பகுதியிலும் பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பீதியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம் தான் காரணம் என வட்டாட்சியர் விளக்கமளித்துள்ளார். கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்த மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா தெரிவித்துள்ளார். ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது சத்தம் ஏற்படுவது வழக்கம்தான் என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025