அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி எடப்பாடி பழனிசாமி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி இன்று தென்காசியில் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்று ஸ்டாலினை சாடி பேசினார்.
இவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
‘ஆட்சியில் இருந்தபோது எந்தச் சாதனையும் செய்யாத மு.க.ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது’ என்று புதிய வேடதாரியாக மாறிச் சாபம் விட்டுள்ளார் எடப்பாடி.அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி ஈபிஎஸ் .மறைமுகத்தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…