மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக,கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு துணை மேயர்,நகராட்சி தலைவர்,பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில்,மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும்,திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி, கன்னியாக்குமரி மாவட்ட கொல்லங்கோடு நகராட்சி தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
அதே சமயம்,பெரிய நாயக்கன் பாளையம்,அந்தியூர்,உள்ளிட்ட பேரூராட்சிகளின் தலைவர் பதவியையும் சிபிஐஎம்-க்கு திமுக வழங்கியுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…