#ElectionBreaking: எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதன்படி, தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச் .ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு – குஷ்பு, துறைமுகம் – வினோஜ் பி.செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருவண்ணாமலை – தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி,  திட்டக்குடி – பெரியசாமி, திருவையாறு – பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு – சரவணன், குளச்சல் -பி.ரமேஷ், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் -டி.குப்புராமு, விருதுநகர் – பாண்டுரங்கன், திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டவர்களும் 17 பேரில் இடம்பிடித்திருந்தனர்.

இதனிடையே, திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்தனர். இரு கட்சிகளும் மீதுமுள்ள தொகுதிகளில் யார் வேட்பாளர் என காத்திருந்த நிலையில், நேற்று எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. விளவங்கோடு- விஜயதரணி, வேளச்சேரி – ஜே.எம்.எச்.ஹசன், மயிலாடுதுறை – ராஜகுமார், குளச்சல் – பிரின்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உதகை – போஜராஜன், விளவங்கோடு – ஜெயசீலன், தளி – நகேஷ்குமார் உள்ளிட்டவர்களை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சியின் மீதமுள்ள வேட்பளார் யார் என்று அறிவிப்புக்கு காத்திருந்த பாஜக, தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

1 hour ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

2 hours ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

3 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

3 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

4 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

4 hours ago