#ElectionBreaking: பெண்களுக்கு இலவச லைசன்ஸ்., மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக.!

Default Image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வரும் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் எல்முருகன் வெளியிட்டுள்ளார். இந்த வெளியிட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும். 18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன், தனிபட்ஜெட் போடப்படும். சென்னை மாநகரம், மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள தடை என்ற சட்டமேலவை கொண்டுவரப்படும். மணல் இறக்குமதிக்கு அனுமதி. மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும்.

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து விநியோகிக்கப்படும். தமிழகம் முழுவதும் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய விலை நிர்ணயக் குழு அமைக்கப்படும்.

மேலும், தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW