மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.
இதனிடையே மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…