யானையை சுட்டு கொன்ற வழக்கு- இரண்டு பேரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் இன்று காலை 25 வயது பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் விளைநிலத்தில் இறந்துகிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது . இந்த சம்பவ அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது, மேலும் யானையின் காதுக்கு மேல் புறத்தில் 2 செ.மீ அளவிலான குண்டு துளைத்து மூளையில் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. என்றும் தெரியவந்துள்ளது, இது தொடர்பாக வனத்துறையினர் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025