கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7ம் தேதி ஆளுநர் மாநிலகையில் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், முக ஸ்டாலினுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
புதிய அரசு பதவியேற்பு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினேன். நோயாளிகள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்ற மருந்து பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…