தற்கொலை செய்து கொள்வது உங்களை ரொம்ப பிடிச்சவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர், மாணவர்கள் எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.
தற்போதும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா அவர்கள், நீட் தேர்வு தற்கொலை குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவ, மாணவிகள் துணிச்சலோடு இருக்க வேண்டும் எனவும், உங்களது உயிரை விட ஒரு பரிட்சை பெரிதல்ல எனவும் கூறியுள்ளார். உங்கள புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.
நீங்கள் செய்து கொள்ளக்கூடிய தற்கொலை உங்களை மிகவும் பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண், தேர்வு ஆகியவை மட்டும் உங்கள் வாழ்க்கை கிடையாது. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவ்வளவு விஷயங்கள் உள்ளது. நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…