பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் – மருத்துவ நிபுணர் குழு

பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று முதலமைச்சரிடம் ஆலோன்சனை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு
முதலமைச்சர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேசுகையில்,தமிழகத்தில் நிறைய பரிசோதனை செய்ததாலே,அதிக அளவில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும்.தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரிசோதனையை குறைக்கக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்த 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா அதிக அளவில் பரவினால் அச்சப்படக்கூடாது.
கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்த்தில் பொதுமுடக்கத்தை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக நீக்க வேண்டும்.இதன் பின் தொற்று நோய் நிபுணர் குகானந்தம் பேசுகையில், பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025