10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்.
ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வீடு தேடி சென்று வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…