காவல் நிலையத்துக்கு போன போலி பெண் போலீஸ் கைது..!

சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சான்றிதழ் கேட்டதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், சீருடையுடன் வந்த அந்த சூரிய பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸ் சீருடையுடன் சென்று, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி வழக்கு விசாரணைகளில் சிபாரிசு கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025