“புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை”- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

Published by
Surya

புதிய வேளாண்சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லையெனவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுசூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அதுகுறித்து பேசிய அவர், தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்ததாகவும், தமிழகம், கர்நாடகா, குஜராத் உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடவில்லை என கூறினார்.

மேலும் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமே போராடுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன்பெறுவது பஞ்சாப் மாநில விவசாயிகளே எனவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட கலந்துகொண்டார்.

அதுமட்டுமின்றி, இந்த கூட்டத்தில் மத்திய அரசு PM Kisan என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.6,000 அதாவது, 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2,500 வழங்கப்படும்.  இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 9,000 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ருபாய் வழங்கப்படும் என்றும், அந்த தொகை வந்துவிட்டால் பயனர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்செய்தி ஒன்று வரும் எனவும், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

Published by
Surya

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

54 minutes ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

1 hour ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

2 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

3 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

4 hours ago