சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது.
இதனால் இன்று உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.சுமார் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…