பெண் காவல் ஆய்வாளர் ஜாமீன் : யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் – ஐகோர்ட் கிளை!

Published by
Rebekal

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என 10 லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் கிளை கருத்து. 

சிவகங்கை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி தனக்கு ஜாமின் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த வழக்கின் தற்போதைய நிலையை அறிய நீதிமன்றம் விரும்புவதாகவும்,  வசந்தி கைது செய்யப்பட்ட பின் நடைபெற்ற வழக்கின் விசாரணை குறித்து போலீஸாரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் நேற்று நீதிபதி புகழேந்தி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெய்லரிடம் 10 லட்சத்தை பறித்து கைதாகியுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் எனவும், வசந்தியின் செயலால் அவர் சார்ந்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

36 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

1 hour ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

13 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

14 hours ago