தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு திருவிழாவும் இவ்வாண்டு நடக்க வில்லை. மேலு ஊரடங்கு தளர்வால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இப்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் ஆணையர் க.பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில் பூஜைகள், திருவிழாக்கள் நடப்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
கொரோனா பரவல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கோவில்களில் தினசரி பூஜைகளை மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் தங்கு தடையின்றி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அரசு தற்போது வழங்கி உள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில்களில் நடக்க வேண்டிய திரு விழாக்களுக்கு அனுமதி கோரியும், திருவிழா நிகழ்வுகளை எல்லாம் யூ-டியூப் சேனல் மூலமாக பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி சார்நிலை அலுவலர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.
கோயில்களில் வழக்கமாக நடக்கும் திருவிழாக்களுக்கு தலைமையிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. திருவிழாக்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு பழக்கம்,மேலும் அந்த வழக்கங்கள்படி கோயில் வளாகத்துக்குள் நடக்க வேண் டும்.
சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடை வெளி கடைபிடித்து திருவிழாக்கள் நடக்க வேண்டும்.விழாக்களில் உபயதாரர் கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி கிடையாது. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பின் அந்த அனுமதியை பெற்று திருவிழாக்கள் நடத்த வேண் டும்.விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்க்கும் கையில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் உத்தரவிட்டு ஆணையர் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…