குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்த மாணவி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். சிறுமியின் அழுகை குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, 90% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுமியை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சிறுமி ஏற்கனவே தன்னை வீடியோ காட்டி மிரட்டிய 3 இளைஞர்களான கணபதி, ஆகாஷ் மற்றும் 17வயது சிறுவனை குறித்து போலீசாரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் போலீசார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…