அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை..!

கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு அமைப்புடன் முதல்வர் இன்று ஆலோசனை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் வரும் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11:30 மணிக்கு நடைப்பெற உள்ளது.
அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பில் 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025