#BREAKING: முதலில் எம்.எல்ஏவாக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்..!

முதல்வருக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியை ஏற்றுக்கவுள்ளனர். இவர்களுக்கு பதவி ஏற்றுக் கொள்ள தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கலைவாணர் அரங்கில் நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். முதல்வருக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுக் கூறி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். 7-வது முறையாக மு க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.
மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025