முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்… அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது… அண்ணாமலை பேச்சு!

Annamalai, BJP State president

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இன்று சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கட்சி விஷயமாக அண்ணாமலை டெல்லி சென்றிருந்ததால் ஆலோசனை கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பேசிய அண்ணாமலை, முதலில் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். 3ம் தேதி நடைபெற இருந்த கூட்டம் நான் வராத காரணத்தினாலும் மற்றும் மூத்த தலைவர்களின் வேலைகள் இருந்ததால் வர முடியவில்லை என தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும், பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும் என்றார்.

வாரம் தவறாமல் கிளை கூட்டம் நடத்த அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் இருந்து செல்லுபவர்கள் செல்லடும் அது அவர்கள் விருப்பம், அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  தேர்தல் கூட்டணி குறித்து டெல்லி தலைமை தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு நாளில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

அந்த பொது கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வேண்டாம் என பாஜக மாநில, மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் கோஷமிட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக உயர்மட்ட குழு கூட்டம், பாஜக தலைமை அலுவகத்தில் கூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி முறிவிற்கு பிறகு பாஜகவின் அடுத்தகட்ட முடிவு என்ன என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக கூறி வருகிறது.

இதனால் தமிழகத்தில் பாஜாகாவின் நகர்வு என்னவாக இருக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து தேர்தலில் போட்டிடுமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சூழலில், பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.  இதனைத்தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக உயர்மட்ட குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war