ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.புத்தாண்டு தினத்தன்று அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலாத்தளங்களுக்கு செல்வது அவசியம்.இந்நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம். காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை செல்லத்தக்கதாகும்.
சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.
மேலும் தொடர்புக்கு,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,
சுற்றுலா வளாகம்,
வாலாஜா சாலை,
சென்னை-2,
தொலைபேசி: 04425333333 / 25333444 / 25333857 / 25333850-54
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…