சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரிபுகைப்படம் வெளியானது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது மிக பிரமாண்டமாகவும், சூரியன் உதயமாகுவது போல் அமைந்துள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை எழுத்தாளர் என்று குறிக்கும் விதமாக அவரது நினைவிட மாதிரி வரைபடத்தில் இங்க் பேனா வடிவிலான ஒரு பிரமாண்ட தூண் உடன் அமைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…