மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபர் சங்கத்தைக் கட்டமைத்த கே.சி.கருணாகரன் நேற்று நள்ளிரவு காலமானார்.
கே.சி.கருணாகரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைவு குறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான கேசிகே என்று அழைக்கப்படும் கே.சி.கருணாகரன் ( 74) உடல்நலக் குறைவால் அக்.,9 நள்ளிரவு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அஞ்சலி செலுத்துவதுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டவர் கே.சி.கருணாகரன்.தொடக்க காலத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்து கொண்டதுடன், அதன் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர்.அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். எளிமையானவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு அவரது மறைவால் வாடும் அவரது மகள், மகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கோவை மாவட்டக் கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…