நில அபகரிப்பு வழக்கு:
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாமீன் மறுப்பு:
இதற்கிடையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்க செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்:
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது. ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கியவழக்கு, சாலை மறியல் வழக்குகளில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
3 வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததால் விரைவில் சிறையிலிருந்து ஜெயக்குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…