முன்னால் எம்.எல்.ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். இவர் தேமுதிக சார்பில் 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் இன்று காலமானார்.
தற்போது இதற்கு தமிழக முதல்வர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், திரு.R.சுந்தர்ராஜன் காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 7, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025