பெண்காவலரை தாக்கிய நபருக்கு கையில் எலும்பு முறிவு…! – காவல்துறை

Published by
லீனா

பெண்காவலரை தாக்கிய நபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் நேற்று கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குத்தியுள்ளார். இதில் படுகாயமைடந்த பெண் காவலரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலருக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு 5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பெண் காவலரை தாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்வதற்காக காவல்நிலையத்திலிருந்து அவரை காவலர்கள் அழைத்துச் சென்றனர். பின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கத்தியை அவர் எடுத்து வர முயன்றபோது வழுக்கி விழுந்ததாகவும், இதில் அவரது கை எலும்பு முறிந்ததோடு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Recent Posts

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…

18 minutes ago

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

2 hours ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

2 hours ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

3 hours ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

3 hours ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

4 hours ago