தகைசால் தமிழர் விருது முதல் – சிறந்த மாநகராட்சி, நகராட்சி வரையில்.. தமிழக அரசு விருது பட்டியல்…

இன்று 77வது சுதந்திர தின விழாவானது சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
தகைசால் தமிழர் விருது :
அதன் பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். திராவிட கழக தலைவர் கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கல்பனா சாவ்லா விருது – அப்துல்கலாம் விருது :
வீரதீர செயல்கள் செய்தோருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது எவெரெஸ்ட் சிகரம் ஏறிய விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது. வேலூரை சேர்ந்த வசந்தாவுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.
சமூக சேவை விருது :
சமூக நலன் மற்றும் சிறந்த சேவைக்கான விருது பட்டியலில், சிறந்த தொண்டு நிறுவனமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மகளிர் நலன் சிறந்த சேவைக்கான விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கு வழங்கட்டுள்ளது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது :
சென்னை மாநகர்ச்சியில் சிறந்த மண்டலம் :
- முதலிடம் – 9வது மண்டலம்.
- 2வது இடம் – 5வது மண்டலம்.
சிறந்த மாநகராட்சி :
- முதலிடம் – திருச்சி ; பரிசு தொகை – 50 லட்ச ரூபாய்.
- 2ஆம் இடம் – தாம்பரம் ; பரிசு தொகை – 30 லட்சம்.
- சிறந்த நகராட்சி :
- முதல் பரிசு – ராமேஸ்வரம்.
- 2வது இடம் – திருத்துறைப்பூண்டி நகராட்சி.
- 3ஆம் இடம் – மன்னார்குடி நகராட்சி.
சிறந்த பேரூராட்சி விருது :
- முதலிடம் – விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்.
- இரண்டாம் இடம் – ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
- மூன்றாம் இடம் – வீரக்கல்புதூர், சேலம் மாவட்டம்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது (ஆண்கள்) :
- தஸ்தகீர், நீலகிரி மாவட்டம்.
- ரா.தினேஷ் குமார், திருச்சி மாவட்டம்.
- கோ.கோபி, ராணிப்பேட்டை மாவட்டம்.
- சாகச விளையாட்டு பிரிவு – பா.ராஜசேகர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது (பெண்கள்) :
- மு.விஜயலட்சுமி, சென்னை மாவட்டம்.
- சந்திரலேகா, மதுரை மாவட்டம்.
- கவிதா தாந்தோணி, காஞ்சிபுரம் மாவட்டம்.
முதலமைச்சர் காவலர் விருது :
- வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க்.
- கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன்.
- தேனி மாவட்ட எஸ்.பி டோங்ரே பிரவீன் உமேஷ்.
- சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன்.
- நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன்.
- நாமக்கல் காவலர் குமார்