நாகர்கோவில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
நாகர்கோவில் மாவட்டத்தில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி இளைஞர் ஒருவருடன் சில நாட்களுக்கு முன்பாக மாயமானார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இதனால் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில், அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். வழக்கை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதி உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு மாற்றி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 2017 முதல் பாலியல் தொல்லை அளித்தது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிகிறது. சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயே சிதைத்துள்ளார் என்று நீதிபதி கருத்து தெரிவித்து, சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…