ஒரு “மாய லாலிபாப்-ஐ” கொடுத்து ஏமாற்றி உள்ளது, அது உண்மை அல்ல – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை. தாகத்தால் தவிக்கும் பசுவுக்கு கானல்நீர் காட்டுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய பாஜக அரசு ’மாய லாலிபாப்’ கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளில் தெளிவு என்பது ஏமாற்றம். தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3500 கிமீ சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விடவில்லை. இப்படியொரு திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது என்று மட்டுமே நிதி நிலை அறிக்கையின் 10-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனவால் இழந்த வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை.

நதி நீர் இணைப்பு, நிவர், புரெவி, கனமழை பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கான மக்களுக்கு, குறிப்பாகத் தமிழக விவசாயப் பெருமக்களுக்கு, மிகவும் ஏமாற்றத்தை தருகிறது. விவசாயிகள், வேலைவாய்பின்றி தவிக்கும் இளைஞர்கள், ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட் இது. சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் கொடுத்திருக்கிறதே தவிர, அந்த லாலிபாப் உண்மையானது அல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

1 hour ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago