அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மாநகர பேருந்தில் சலுகை – தமிழக அரசு உத்தரவு..!

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் போன்று தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியது.அதன்படி,தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில்,சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025