மேலூரில் அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கி, 5 லட்சம் வழிப்பறி!

அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கிவிட்டு 5 லட்சம் வழிப்பறி செய்து சென்ற மர்ம நபர்கள்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தும்பை பெட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு பாண்டி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு 5 லட்சம் பணத்துடன் அதை வங்கியில் செலுத்துவதற்காக தனது சகோதரன் கண்ணனுடன் சத்தியபுரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்ம நபர்கள் பாண்டி மற்றும் கண்ணனை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 5 லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025