வேதா நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அரசே வைத்திருக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அதனை அரசே வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
திறப்பு விழா முடிந்ததும் நீதிமன்ற பதிவாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதி ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு மனுக்கு பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டிஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக திறக்க தடையில்லை என்றும் ஆனால், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…