mk stalin [File Image ]
சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் வயது 19, நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல், நேற்றிரவு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 77வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி.
நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலை மதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது. ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.
‘நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார். தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர்.
ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன்.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் -உயர் கல்வித் துறையைக் குழப்பியும் – தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் நிறைவேற்றி அனுப்பிய இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
ஜார்ஜியா : வரலாற்றில் முதன்முறையாக, மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள், கோனேரு ஹம்பி மற்றும்…
லண்டன் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜூலை 23-26, 2025 அன்று இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில்…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…
அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…
டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…