2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் 2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 28ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.இதே நாளில் திருநங்கை ஸ்வப்னா வழக்கையும் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில்,…
அமெரிக்கா : உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல்…
சென்னை : சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்,…