குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

tnpscgroup2

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், தேர்வு நடந்து 56 நாள்களில் முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12ஆவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

இந்தத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இணையதளமான இதில் க்ளிக் செய்து, ரெஜிஸ்டர் நம்பர், பிறந்த தேதி, கேப்ட்சா ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்காணும் தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த முதன்மை எழுத்து தேர்வை 20,033 மாணவர்கள் எழுதியதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்