சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுக்கள், நினைவுச்சின்னங்கள் உதகைக்கு மாற்றப்பட்டு, அதன்பின் கடந்த 1966ம் ஆண்டு மைசூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி தமிழ் சார்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘தமிழ்க் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகம்’ என அழைக்கப்படும் என்றும் இந்திய தொழில்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சு.வெங்கடேசன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அலுவலகம் இனிமேல் “தமிழ் கல்வெட்டு அலுவலகம்” என்று அழைக்கப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…