திருச்சியில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு..!

இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி திருவெறும்பூர் அருகே படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி கடற்படை, கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கப்பல்களில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய நவீன இயந்திர துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் தெர்மல் இமேஜர் ஃபைண்டர் போன்ற நவீன வசதிகள் உள்ளன.