கொரோனா தடுப்பு – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நாளை ஆலோசனை!!

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மூன்றாவது அலை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் நாளை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைய தொடங்கிய நிலையில், தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இதில், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டியிருந்தாலும் பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது.
அதே சமயத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025