குட்நியூஸ்…இவர்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் – தமிழக அரசு அரசாணை! என்னென்ன தகுதிகள்? விவரம் இங்கே!

Published by
Edison

1000 சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

“சிறுபான்மையினருக்கு 1000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

பொதுவாக,ஏழ்மை நிலையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார நிலையினை மேம்படுத்த மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இதே போன்று சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கெனவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ளவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிடலாம் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில்,சிறுபான்மையின நல இயக்குநரின் பரிந்துரையை நன்கு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று 2021-22 ஆம் ஆண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயற்படுத்தும் விதமாக 1000 சிறுபான்மையின பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது.

மேலும்,சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரங்கள் வழங்கிட தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிச் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 (Tamil Nadu Transparency in ‘Tender Act 2000) ஆகியவற்றைப் பின்பற்றி விலைப்புள்ளிகள் பெற்று ரூ.45.00,000/- ரூபாய் நாற்பத்தைந்து இலட்சம் மட்டும் செலவில் நிதி ஒப்பளிப்பு கோரி கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு சிறுபான்மையின நல இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

குறிப்பாக,இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்குட்பட்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்:

  • தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ.1,00,000/ ஆக இருத்தல் வேண்டும்.
  • வயது வரம்பு – 20 முதல் 45 வரை.
  • கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

31 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago