ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார்.
சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். உடனே பொதுமக்கள் மற்றும் நடத்துனரின் உதவியோடு அருகில் உள்ள சிறுவலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வராஜ் மாரடைப்பு காரணத்தால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிர் போகும் நேரத்திலும் தனது இயலாமையை நடத்துனரிடம் தெரிவித்து பயணிகளின் நலனை காத்த ஓட்டுநரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…