ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72) மற்றும் பாக்கியம் (வயது 63) ஆகியோர் 2025 ஏப்ரல் 28 அன்று தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் 10.75 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கை விசாரிக்க, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சுஜாதா தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர விசாரணை […]
சென்னை : ஈரோட்டில் இன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். வருகை தந்த பிறகு கருதரங்கத்தை திறந்து வைத்துவிட்டு சில விஷயங்களையும் பேசினார். விழாவில் பேசிய அவர் ” வேளாண்மையும் உழவர் நலனும் நம்முடைய முதன்மையான கவனத்துக்கு உரியவை. அதனாலதான் வேளாண் துறையோட பெயரை ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’னு மாத்தியிருக்கோம். இது வெறும் பெயர் மாற்றம் இல்லை; நம்ம உழவர்களுக்கு மேம்பட்ட சேவைகளை, ஆதரவை கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோட செய்யப்பட்ட […]
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர், தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் நகை மற்றும் பணத்திற்காக முதிய தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக விசாரணை செய்து […]
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த நிலையில், மர்மமான முறையில் அவர்கள் உயிரிழந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். […]
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பட்ட பகலில் இப்படியா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்ப வைத்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய மூன்று பேரும் காலில் சுடப்பட்டநிலையில் பிடிபட்டனர். கார்த்திகேயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 […]
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட கிச்சிபாளையம் பகுதி SMC காலணி பகுதியை சேர்ந்த ஜான் மீது கிச்சிபாளையம், செவ்வாய் பேட்டை பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் மனைவி, மகன், மகளோடு வசித்து வந்துள்ளார். இவர் இன்று தனது […]
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்புகள் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டிருந்தார். ஆனால், கோபி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது . செங்கோட்டையன் விளக்கம் […]
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பின், மக்கள் செலுத்திய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 70 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் […]
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மற்ற வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. அதிமுக, பாஜக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேச்சைகள் என 46 பேர் களத்தில் உள்ளனர். 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தைச் […]
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ இவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தையடுத்து நாளை (பிப்ரவரி 5ஆம் தேதி) அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதியாக, 46 […]
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதியாக, 46 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதே சமயம், இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சி அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதியதாக […]
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து அங்கு வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதால் தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு தொகுதிக்கு வந்த வெளிமாவட்டத்தினர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜனவரி 23ம் […]
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெரும் பணி கடந்த ஜனவரி 10 முதல் தொடங்கப்பட்டது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று கடைசி நாளில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவுபெற்றது. அதன்படி, வேட்பு மனுத் தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 56 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று […]
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாள் என்பதால் திமுக சார்பாக போட்டியிடும் வி சந்திரகுமார் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் பேசியதாவது ” தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவின் இலக்கு என்று கூறிய அவர், இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை களத்தில் […]
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக-வை […]
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் செய்து வரும் நிலையில், அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து தேசிய ஜனாயக கூட்டணி பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது வரை, இடைத்தேர்தலில் திமுக, நாதக […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் […]
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு […]