“ஈரோடு கிழக்கில் போட்டியுமில்லை.. ஆதரவுமில்லை” – தவெக பொதுச் செயலாளர்!
அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வரிசையில் தவெகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது.

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தவெகவின் இலக்கு என்று கூறிய அவர், இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை களத்தில் இருக்கும், திமுக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் மற்றும் நாதக கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தவெக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— TVK Party Updates (@TVKHQUpdates) January 17, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025